Sun. Sep 19th, 2021

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Latest News

வடமாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்

வடமாகாணத்தில் 20வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ...

மன்னாரில் சிறுவன் உயிரிழப்பு, தாயாரினால் கொலை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

கள்ளியடிப் பகுதியில் 14 வயதுச் சிறுவன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரின் இறப்பு தற்கொலை அல்ல கொலை என தாயாரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்...

துருவு பலகையால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் துருகுபலகையால் கணவனைத் தாக்கி கொன்றதாக  யாழ்ப்பாணம் பொலீஸார் மனைவியைக் கைது செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான துரைராசா செல்வராசா (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார். அச்சுவேலி...

உச்சிலம்மன் கோயிலடியில் திருடர்கள் கைவரிசை

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் கிழக்கு உச்சிற் புவனேஸ்வரி அம்மன் கோயிலடியில் திருட்டுக்கு முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை  இரவு நடைபெற்றிருக்கலாம் எனத் அறியப்படுகிறது. ஆலயக் குருக்கள் காலை பூஜைக்கு வந்து...

கரவெட்டியில் 87.4% மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது தடுப்பூசியை 87.4% மானவர்களும், இரண்டாவது தடுப்பூசியை 71%மானவர்களும் பெற்றுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கரவெட்டி சுகாதார வைத்திய...

ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல்

வலிகாமம் கல்வி வலய இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் "போராட்டமும் அதன் தற்போதைய தொழிற்சங்க செயற்பாடுகளும், சட்ட ரீதியான விளக்கமும்" எனும் தொனிப் பொருளில் அதிபர்கள்,  ஆசிரியர்களுகாகான விசேட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை  இரவு...

அதிபர், ஆசிரியர்களுகாகான மகிழ்ச்சியான செய்தி

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பாக நேற்று முன்தினம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில சீ.கே.பெரேரா அவர்களினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் அமைச்சரவை பத்திரம் இலக்கம் 21/1563/302/023 -1 மற்றும்...

கோப்பாய் விபத்தில் குடும்பஸ்த்தர் பலி

கோப்பாய் இராச வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இராசவீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி கணேசலிங்கம் (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நல்லை...

யாழ் மாநகர சபையால் வேலணையில் கொட்டும் கழிவுகள் – மீள அகற்றுமாறு அறிவுறுத்தல்

யாழ் மாநகர சபையின் சுகாதார சீர்கேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளதுடன் மீள அகற்றுமாறு வேலணை பிரதேச சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபையால் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்...

காணிகளை அடையாளப்படுத்தும் போது அரச அதிபரின் அனுமதி பெற வேண்டும்- அமைச்சர் திட்டவட்டம்

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்ற போது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி...

பயணத் தடை ஒக்டோபர் 1ம் திகதி வரை நீடிப்பு

பயணத் தடையை மேலும் நீடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணத் தடையானது எதிர்வரும் 21ம் திகதி முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி 4 மணி வரை பயணத் தடை...

வடமராட்சியில் கொரோனாவால் இருவர் மரணம்

வடமராட்சி பகுதியில் இறந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரணவாய் அண்ணாசிலையடியைச் சேர்ந்த 61 வயதுப் பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த போதிலும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின்னர்...

கரவெட்டியில் 50 ஏக்கர் தரிசு நிலம் புனரமைப்பு

தரிசு நிலமாக காணப்பட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச் செய்கை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்று நடைபெற்றது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக கரவெட்டி கமநல சேவைகள் நிலைய பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை...

சாதி ரீதியாக மக்களின் விபரம் திரட்டும் இராணுவத்தினர்

யாழ் மாவட்டத்தில் சாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை தருமாறு, இராணுவத்தினரால் கோரியமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். பிறப்பு சான்றிதழ் படிவத்தில் கூட சாதி எனும் இடத்தில் இலங்கை தமிழர் என்பதே குறிப்பிடப்படுகின்ற நிலையில்...

இளம் தந்தை உயிரிழப்பு- கொலை எனச் சந்தேகம்

ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பில் சந்தேகம் எனத் தெரிவித்து பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டபுரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்களால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில்...

தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 60 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு சற்று முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் குறித்த இடத்தில் நடைபெற்றது. அடிக்கற்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின்...

கரவெட்டி இராஜ கிராமத்தில் மோதல் 10 பேர் கைது

கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் ஏற்பட்ட குழு மோதலில் 10 பேரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர். கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் குடும்பங்களுக்கிடையிலான மோதல் விரிவடைந்தமையைத் தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி...

வடமராட்சியில் கைக் குண்டு மீட்பு

வடமராட்சி பகுதியில் கைக் குண்டு ஒன்று வல்வெட்டித்துறை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி தொண்டைமானாறு வீதியில் அமைந்துள்ள கிராய் குளத்திற்கு அருகிலேயே இக் கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மண்ணில் புதையுண்ட நிலையில் கைக் குண்டு இருப்பதைக்...

இறந்த ஒரு வயதுக் குழந்தைக்கும் கொரோனா அப்பகுதியே சோகத்தில்

பருத்தித்துறையில்  மரணமாகிய ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சியின் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு...

பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு கொரோனா

பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் பொறுப்பதிகாரியுடன் சிறிது நேரம் உரையாடிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று...

மீசாலை விபத்தில் இளைஞர் பலி

நேற்று இரவு மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆட்டோ சாரதியான இளைஞர் ஒருவர் பலியானார். நேற்று இரவு 9.30 மணியளவில் தென்மராட்சி மீசாலை சந்தி - புத்தூர் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீசாலை...

பயணத் தடையிலும் ஆசிரியர்கள் கையொப்பம் இட வேண்டிய நிலை -ஆசிரியர்கள் விசனம்

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்,  ஆசிரியர்களின் மற்றும் ஊழியர்களை சம்பள விபரப் பட்டியலில் கையொப்பம் இடுமாறு பணிக்கப்பட்டமைக்கு தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். தற்போது கொரோனா அதிகரிப்பால் பயணத் தகை விதிக்கப்பட்டுள்ளது.  வீதிகளில்...

வீட்டில் இறந்தவருக்கு தொற்று

வீட்டில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 64 ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பல்வேறுபட்ட நோயால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு வீட்டில் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபரை...

கரணவாய் கிழக்கில் கொரோனாவால் மரணம்

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரணவாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய  பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த...

குளத்திற்கு பெளத்த நிறமல்ல அதிகாரி விளக்கம்

பௌத்த வர்ணமல்ல, ஒலிம்பிக் வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த...

நெல்லியடி வங்கி முகாமையாளருக்கு தொற்று

தேசிய சேமிப்பு வங்கியின் நெல்லியடிக் கிளை முகாமையாளர் மற்றும் நெல்லியடி food cityயில் பணிபுரியும் ஊழியர் போன்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகாமையாளருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து யாழ் வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட...

வாரத்தில் இரு தினங்கள் மூடப்படவுள்ள தபாலகங்கள்

தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், நாட்டின் அனைத்து அஞ்சல் மற்றும் துணை தபால் நிலையங்களையும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே திறக்க தபால் துறை முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு செப்டம்பர் 21...

நாட்டு மக்களை இருவேளை உண்ண சொல்லிவிட்டு, உல்லாச பயணத்தில் அரச தலைவர்.

17 பேர் கொண்ட குழுவுடன் இத்தாலி சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச மிகவும் உயர்தர உணவகத்தில் மதுபானங்களுடன் உணவருந்தும் புகைப்படம் சமூகவலங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது. இந்த குழுவில் மஹிந்த ராஜபக்சவின் மகனும் சென்றிருப்பது தெரியவந்துள்ளது....

அந்தோணியார் சிலை பொலீஸ் நிலையத்தில் பிள்ளையார் சிலை தேடும் பணியில்

அந்தோணியார் சிலையை மடு பொலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்திவிட்டு அந்தோணியார் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மடு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கவனத்திற்கு, இந்து குருமார்கள்...

உடுப்பிட்டி தொகுதிக்கு கலைவாணி பரிந்துரை

தமிழரசுக்கட்சியின் கரவெட்டி பிரதேச சபையின்  உடுப்பிட்டி தொகுதிக்கு திருமதி. கலைவாணி அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இரத்தினம்...

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்