Sat. May 4th, 2024

தொற்றா நோய்களை தடுப்பதற்கு அனைவரும் குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி.என்.தயாளினி

தொற்றா நோய்களை தடுப்பதற்கு அனைவரும் குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி.என்.தயாளினி தெரிவித்துள்ளார்.

AIA நிறுவனத்தின் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி பவனி நடாத்தினர். இதில் தலைமையுரையினை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொற்றா நோய் வைத்தியசாலைகளுக்கும், சுகாதார திணைக்களத்திற்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதனால் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு ஏப்ரல் மாதத்தை தொற்றா நோய்க்கான விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தி உள்ளது.
தொற்றா நோய்கள் பலவற்றில் உடற்பருமன் அதிகரித்தலும் முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கான காரணம் எமது தவறான உணவுப் பழக்கமும், உடற்பயிற்சி இன்மையுமே முக்கிய காரணமாக இருக்கிறது.நாம் சுகதேகிகளாக வாழ்வதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வதோடு உணவுப் பழக்கவழக்கங்களையும் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். பலர் தாம் வீட்டில் பல மணி நேரம் வேலை செய்கின்றோம். அதனால் உடற்பயிற்சி தேவையில்லை என நினைக்கிறார்கள். இதனை உடற்பயிற்சியாக கருத முடியாது. ஏனெனில் நாம் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் வேலை செய்வதில்லை. தற்போது பெற்றோர்கள் பலர் திடீர் உணவு வகைகளையே பிள்ளைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இது தவறான உணவுப் பழக்கம் ஆகும். இவற்றையெல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் எல்லா வைத்தியசாலைகளிலும் தொற்றா நோய் வரும் முன்னர் அறிந்து கொள்ளும் நிலையமாக எச்.எஸ்.சி. இயங்கி வருகிறது. 38 வயதிற்கு மேல் 65 வயது வரை உள்ளோர்களை நாம் கலந்துரையாடி வருகின்றோம். பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வின் எல்லையை நீடிப்பதும், வாழ்வை சிறப்புற மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாக கருதப்படுகிறது. எனவே தொற்றா நோயானது பலருக்கும் சுமையாகவே கருதப்படுகிறது. இதனை இல்லாமல் ஒழிக்க அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்