Thu. May 9th, 2024

தாயினதும் சேயினதும் ஆரேக்கியத்தைப் பேண பதின்ம வயதுக் கர்ப்பங்களைத் தவிர்ப்பதே சிறந்தது பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட்

தாயினதும் சேயினதும் ஆரேக்கியத்தைப் பேண
பதின்ம வயதுக் கர்ப்பங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
பதின்ம வயதான பத்து முதல் பத்தொன்பது வயதில் கர்ப்பந்தரிப்பது தாயினதும் கருவுறும் குழந்தையினதும் ஆரோக்கித்திற்கு ஆபத்தானது. அதைத்தவிர்ப்பதே புதிசாலித்தனமானது என பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பூநகரி பிதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட சிறுவர் கழக அங்கத்வர்களுக்கான விழிப்புணர்வூட்டும் பயிற்சிப் பட்டறை பூநகரி பிரதேச செயலகத்தின் மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பதின்மவயதுப் பெண்களின் கருப்பை கருவை முழுமையான வினைத்தினனுடன் சுமக்கும் ஆற்றலைக் கொண்டிருக்காது. இடுப்பு வளைய என்புகள் பூரணமாக தாங்குதிறனைக் கொண்டிராது. தாயின் உடற்திணிவுச்சுட்டி, குருதியில் உள்ள ஈமோகுளோபின் அளவு என்பன பொருத்தமான மட்டத்தை அடைந்திராது. அத்துடன் அந்தப்பெண் தன்னைத்தானே தாயாக உணரும் உளப் பக்குவமும் குறைவாகவே இருக்கும்.
எனவே இந்த பதின்ம வயதுப் பருவத்தில் உருவாகும் கர்ப்பங்கள் கருச்சிதைவுக்கு உட்படவும், பூரண விருத்தியடையாத குழந்தைப் பிறப்பிற்கும், நிறைகுறைந்த பிறப்புகள் நிகழ்வதற்கும், பிசவத்தின் போது தாய்க்கு அதிக குருதி இழப்பு ஏற்படவும், இவற்றினூடு தாய், சேய் மரணங்கள் சம்பவிக்கவும் வாய்ப்புகள் அதிகமாவதோடு பிரவத்தின் பின்னரான அதிக உளச்சிக்கல்களை தாய் எதிர்கொள்வும்,பிள்ளைப் பராமரிப்பு மற்றும் குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உருவாகும்.
ஆகவே பதின்ம வயதுப்பிள்ளைகள் தமது கல்வியிலும் ஆளுமை வளர்ச்சியிலும் இந்த்காலத்தில் தீவிர கவனஞ் செலுத்துவதோடு தமது உடல் ஆரோக்கியத்தையும் இனப்பெருக்க சுகாதாரம்,  சமூகம் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களுக்குள் தம்மை அடிமையாக்கிக் கொள்ளாது நேர்வய சிந்தனைகளுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தமர்பு பூநகரி பிதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்