Wed. Apr 24th, 2024

உலகம் தார்மீக கடப்பாடுகளின் அழிவின் விளிம்பில் – உலக சுகாதர அமைப்பின் தலைவர்

கோவிட் தடுப்பூசிகளின் சமமற்ற விநியோகம் காரணமாக உலகம் அதன் தார்மீக கடப்பாடுகளின் பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் எச்சரித்துள்ளார்.

அதன் தலைவர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் , தெரிவிக்கையில், பணக்கார நாடுகளில் உள்ள இளைய ஆரோக்கியமான மக்கள் ஏழை நாடுகளில் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்பாக கோரோனோ தடுப்பூசியை பெறுவது நியாயமில்லை என்று தெரிவித்தார்.

உலகத்தில் உள்ள 49 பணக்கார நாடுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குறைந்த வருமானம் கொண்ட நாட்டில் வெறும் 25 தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கவலை வெளியிட்டார்.
இதனிடையே உலகின் முன்னணி பணக்கார நாடுகள் தங்கள் நாட்டின் மக்கள் தொகைக்கு அதிகமாக தடுப்பூசிகளை பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதுடன் , கனடா நாடு அதிகபட்ஷமாக சனத்தொகையின் 8 மடங்கு தடுப்பூசிகளை பெறுவதற்கு உடன்படிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்