Wed. May 8th, 2024

இந்தியாவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்

இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிதாக10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,542 – ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன் கிழமை10,158 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை,11,109 பேர் பாதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 10,753 ஆகவும், சனிக்கிழமை 10,093 ஆகவும் பதிவாகி உள்ளது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்