Mon. May 6th, 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை உதயபுரி கிராமத்திற்கு ரூபா 22 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது

சந்நிதியான் ஆச்சிரமத்தால்
திருகோணமலை உதயபுரி கிராமத்திற்கு ரூபா 22 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.
திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரி முத்துக்குமார சுவாமிகள் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று காலை 11:00  மணியளவில் அறநெறி பள்ளி  தலைவர் ஐ.சிவராசா  தலமையில் இடம் பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 22 இலட்சம் பெறுமதியில்  அமைத்துக் கொடுக்கப்பட்ட  கட்டிடத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்ததுடன் நடுகல்லையும் திரை நீக்கம் செய்து வைத்ததார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான தாயபாரன்,  சந்நிதியான் ஆச்சிரம பிரதிநிதி கஜானன், செல்வநாயகபுரம் உதயகிரி அருள்மிகு முத்துக்குமார சுவாமி ஆலய  பரிபாலனசபை தலைவர் விஜேந்திரன், செயலாளர் ரா.சிவராசம், பொருளாளர்
மு.பாக்கியநாதன், உதயபுரி கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் போ.கமலகாசன், உதயபுரி சனசமூக நிலைய தலைவர் ஆர்.கே, கோணாமலை, அறநெறி ஆசிரியர் பா.கோகிலவாணி, உட்பட பலரும் கலந்து கொண்டு மங்கல விளக்கை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து  மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், வழங்கி வைக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்