Sat. May 4th, 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்கும்  தேசிய வேலைத் திட்டம்  ஜனாதிபதி  கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வானது  மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.
மருதங்கேணி பிரதேச செயலாளர் கு. பிரபாகரமூர்த்தி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து  கடற்றொழில்  அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு  குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்    மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கான இலவச  அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டம் சம்பிரதாய பூர்வமாக
ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்