Mon. May 6th, 2024

B.Ed. உடற்கல்வி கற்கை நெறி நிலையம் வடமாகாணத்திற்கும் தேவை

B.ED உடற்கல்வி கற்கைநெறிக்கு வடமாகாணத்திலும் கற்றல் வளநிலையம் தேவை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.   B.ED உடற்கல்வி பாடகற்கை  நெறி முதல் முதலாக 2017ம் ஆண்டு ஆம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்திலும் ஒரு வளநிலையம் அமைக்கப்படும் என தேசிய கல்வி நிறுவனம் உறுதியளித்தபோதும்,  பின்னர் வவுனியாவில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் கற்றலுக்கு சென்ற உடற்கல்வி ஆசிரியர்களில் பலர்  மன உளைச்சலுடன் கற்றலில் இருந்து இடைவிலகியதுடன் சிலர் மாத்திரமே கற்கை நெறியை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இம்முறை  வடமாகாணத்திற்கு  வளநிலையம் வழங்காது கொழும்புக்கும் கண்டிக்கும் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நூற்றுக்கனக்கான உடற்கல்வி ஆசிரியர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக  உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கவனமெடுத்து அவசரமாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி  சுனில் ஜெயந்த நவரட்னாவுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இக் கோரிக்கையில்  வட மாகாணத்திற்கு கற்றல்  வளநிலையம் நிறுவப்பட வேண்டும் எனவும் கல்வியல் கல்லூரியில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களுக்கு ஒருவருட சலுகை வழங்குவது போல கலாசாலை நிறைவு செய்தவர்களுக்கும்  பல்கலை கழக உடற்கல்வி டிப்ளோமாதாரிகளுக்கும் ஒரு வருட சலுகை வழங்க வேண்டும். ஏனெனில் பாடப்பரப்பு, அதன்கால எல்லை என்பன  ஒரே மாதிரியானது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் நலன்சார்ந்து நல்ல முடிவினை தருமாறு சங்கத்தின் தலைவர் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்