Sun. May 5th, 2024

நயினாதீவில் நாளை நன்னீர் திறந்து வைக்கப்படவுள்ளது

கடல் நீரை நன்னீராக சுத்திகாித்து வழங்கும்
பொறிமுறை நாளை நயினாதீவில் பிரதமா் மகிந்த ராஜபக்ஸ
அவா்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். கிளிநொச்சி குடி நீா் திட்டத்தின் ஒா் அங்கமாக நயினாதீவில் கடல் நீரை சுத்திகாித்து நன்னீராக  (Reverse   Osmosis)  வழங்கும் பாாிய குடிதண்ணீா்  திட்டம் நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு 06.10.2021ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
 
தினமும் 5000 குடும்பங்கள்  நன்மையடையக்கூடியதான இத்
திட்டத்திற்கான முன்மொழிபினை யாழ். கிளிநொச்சி குடிநீா் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்கான 
திட்டப் பணிமனை  திட்டப் பணிப்பாளா் கொழும்பு தேசிய நீா்வழங்கல் வடிகாலமைப்புச்
சபைக்கு  வழங்கியிருந்தது.
 
தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால்  1955  இல் குடிநீா்த்திட்டம் முன்னெடுக்கப்பபட்டிருந்த போதிலும்  அங்குள்ள இந்து – பௌத்த ஆலயங்களுக்கும் மற்றும் ஒருசில குடும்பங்களுக்கும் மட்டுமே நன்னீா் வழங்க கூடியதாக இருந்தது.
 
ஆனால் கடல் நீரை நன்னீராக சுத்திகாித்து வழங்கும் பாாிய பெரும்பாக கருத்திட்டத்தின் ஊடாக  100 கன மீற்றா் கொள்ளவுடைய பொிய நீா்த்தாங்கி  அமைத்து நயினாதீவில் உள்ள அனைத்து மக்களும் முழுமையாக பயன்பட கூடிய திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 187 மில்லியன் ரூபாவை நன்கொடையாக (jfpr)  வழங்கியிருந்து.
 
இதன் மூலம் தினமும் 300 கனமீற்றா் கொள்ளவுடைய  கடல் நீா் பெறப்பட்டு 150 கனமீற்றா் நீா் சுத்திகாிக்கப்பட்டு 100 கனமீற்றா் குடி தண்ணீா் மக்களுக்கு வழங்குவதற்காக நீா்தாங்கியில் தேக்கபட்டு வழங்கப்படும்.
 
இத் திட்டத்துடன் இணைந்ததாக ஜப்பானின் நிதிப்பங்களிப்பில் 1.255 அமொிக்க டொலா் நிதிப்
பங்களிப்பில் ஐஸ் தொழிற்சாலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
 
இப் பாாிய அபிவிருத்தி திட்டம் நாளை  ( 6.10.2021 ) புதன்கிழமை  நிகழ் நிலையில் (Online Process) பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ  அவா்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றவுள்ளாா். இந் நிகழ்வில்  நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சா் வாசுதேவ நாணயக்கார , கிராமிய மற்றும் நீா் வழங்கல் இராஜாங்க அமைச்சா்சனத் நிசாந்த , மீன்பிடி மீனவத்துறை அமைச்சா் டக்ளஸ்ட தேவானாந்தா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான பணிப்பாளா்  நாயகம் கே. வைக்கோமா,  நாடாளுமன்ற பிரதிகுழுக்களின் தலைவா் 
அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநா் சாா்ள்ஸ், திட்டப்பொறியியலாளா் தி.பாரதிதாசன், அமைச்சின் செயலாளா்கள் மற்றும் அதிகாாிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனா்.
 
இதேவேளை யாழ் கிளிநொச்சி குடிதண்ணீா் திட்டத்தின் கீழ் 300000 மக்கள் 184 கிராம அலுவலா் பிாிவில் உள்ள  ஊா்காவற்றுறை, வேலனை வலி.தென்மேற்கு, வலி. மேற்கு, வலி.கிழக்கு நல்லுாா், யாழ் நகா், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் பளை  பிரதேச செயலக பிாிவு மக்கள் தாளையடியில் உள்ள கடல் நீரை சுத்திகாித்த வழங்கும் பொறி முறை 266 மில்லியன் அமொிக்க டொலா் செலவில் தினமும் 24 ஆயிரம் கன மீற்றா்  பாதுகாப்பான நன்னீா குடிதண்ணீா் வழங்க துாித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்பச் சபையின் யாழ் கிளிநொச்சி குடிநீா் திட்டத்தின் 
தி்ட்டப்பணிப்பாளர் பொறியியளாளா் தி். பாரதிதாசன் முழுமையாக ஒழுங்கமைத்துள்ளாா்.
 
இதனைவிட மாவட்டம் முழுவதும் 20 பாாிய குடிதண்ணீா் தாங்கி அமைக்கப்பட்டுள்ளதுடன் 184 கிலோ மீற்றா் துாரத்திற்கு வலைப்பின்னலாக குடி நீா்க் குழாய்கள் பொருத்தப்படடள்ளன.
 
இதே நேரம் நயினாதீவுடன் இணைந்த வகையில்  விரைவில் வடக்கு தெற்கு அனலைதீவு, எழுவை தீவு பிரதேசத்திற்கான குடி தண்ணீா் திட்டமும் புா்த்தி செய்து வழங்கப்படும் என தேசிய நீா வழங்கல் வடிகாலமைப்பச்சபையின் சிரேஸ்ட பொறியியளாளா் அறிவித்துள்ளாா்.
 
 
 
 
 
 
 
 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்