Thu. Apr 25th, 2024

வடமாகாணத்தில் மடு கல்வி வலயம் முன்னிலையில்

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் வடமாகாணத்தில் மடு கல்வி வலயம் முன்னிலை பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து மற்றும் பொருளாதார
நிலைமை காரணமாக மேலதிக வகுப்பிற்கும், மழை காலங்களில் போக்குவரத்தில் பாடசாலைகளுக்கு  மாணவர்கள் வருவதில் இடர்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும் இச்சாதனையை எட்டியுள்ளனர்.
கடந்த வருடம் அங்கு வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய கனகசபை சத்தியபாலன் அவர்களால் பாட ரீதியாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டது. அப்போது வலயக் கல்வி பணிப்பாளரால் “நீங்கள்_கஸ்ரப்படுங்கள் அதன் பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்” என ஆறுதல் கூறியுள்ளார். அந்த அந்ப்பணிப்பான சேவையால் மடு கல்வி வலயம் இன்று முன்னிலை பெற்றுள்ளது.
க.பொ.த(சா/த)-2020 பரீட்சை நடைபெற்று பெறுபேறுகள் வெளியான நிலையில்  99 கல்வி வலயங்களின் சித்திவீத அடிப்படையிலான வரிசைப்படுத்தலை, பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி வலயங்களின் வரிசையில் மடு கல்வி வலயம் இலங்கை வலயங்களின் அடிப்படையில் 35வது நிலையிலும்,  வடமாகாண வலயங்களில் முதலிடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இதனடிப்படையில்
35வது – 01 – மடு – 75.87%
44வது – 02 – யாழ்ப்பாணம் – 75.10%
45வது – 03 – மன்னார் – 75.06%
60வது – 04 – வடமராட்சி – 72.96%
69வது – 05 – முல்லைத்தீவு – 71.44%
75வது – 06 – தென்மராட்சி – 70.31%
76வது – 07 – வவுனியா.தெற்கு – 69.75%
89வது – 08 – வவுனியா.வடக்கு – 68.46%
93வது – 09 – கிளிநொச்சி – 65.79%
95வது – 10 – துணுக்காய் – 64.13%
96வது – 11 – வலிகாமம் – 63.37%
99வது – 12 – தீவகம் – 57.28% பெற்றுள்ளன.
க.சத்தியபாலன் அவர்கள்
வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வடக்கு மாகாணம் முன்னேற்றம் கண்டதுடன்  தற்போது வடமராட்சி கல்வி வலயத்தை பொறுப்பேற்றுள்ளமையால் எதிர்வரும் காலங்களில் வடமராட்சி வலயம் முதலிடத்தை பெறும் எனக் கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்