Mon. May 6th, 2024

தும்பளை புனித லூர்து அன்னையின் திருவிழா நாளை ஆரம்பம்

தும்பளை புனித லூர்து அன்னையின் யாத்திரைத் திருத்தல திருவிழா நாளை  2ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பருத்தித்துறை பங்குத் தந்தையும் , மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்பணி A.F. பெனற் அடிகளாரின் தலைமையில் இத்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் . தினமும் 04.30 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் நடைபெறும் . மாலை திருமறை நவநாட்களின் போது அருட்பணியாளர் L.R. யூட் அவலின் ( அமதி ) உரை இடம்பெற்று 10 ம் திகதி வியாழக்கிழமை மாலை வழிபாட்டில் திவ்விய நற்கருணை விழாத் திருப்பலியும் , ஆராதனையும் , பவனியும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணியாளர் P.J. ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெறும் . 11 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 05.30 மணிக்கும் . 07.00 மணிக்கும் திருவிழாத் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படும் . 07.00 மணிக்கு நடைபெறும் திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஒப்புக் கொடுப்பார் . திருப்பலியின் நிறைவில் புனித ஆண்டகை தலைமை தாங்கி லூர்து அன்னையின் திருச்சொருபப் பவனியும் ஆசீரும் இடம்பெறும் . நவநாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் கடைகள் அமைப்பது தடை நிலவரங்களுக்கேற்ப சுகாதார திருவிழாவும் Covid 19 நடைமுறைகளை பின்பற்றி திருவிழாவுக்கான சகல ஆயத்த ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்