Wed. Apr 24th, 2024

வடக்கு வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட அணியில் திகழும் காலம் வெகு விரைவில்- ப.தர்மகுமாரன்

இலங்கை உதைபந்தாட்ட அணியாக வடக்கு வீரர்கள் திகழும் காலம் வெகுதூரம் இல்லை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு கழகம் சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட அக்கடமியின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மன்னார் இலுப்பைக்கடவை மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்  கு.பிரசன்னா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சங்கத்தின்  தலைவர் மேலும் தனதுரையில் குறிப்பிடுகையில், விளையாட்டு என்பது இன்றைய காலத்தின் கட்டாயமானது. இது பொழுது போக்கிற்கும், தொற்றா நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், தேசிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளவதற்கும், தேசிய அணியில் இடம்பிடித்தலுக்கும், தொழில் முறைமை என நான்காக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் பொழுதுபோக்குக்கு கூட விளையாடுவதில்லை. நாம் இனரீதியாக வளர்ச்சியடைய விளையாட்டு முக்கியமானது. அதிலும் பயிற்சியாளர்களின் தகமைகள் அதிகரித்து அங்கீகாரம் வழங்க வேண்டும். ஏனெனில் மகாபரதத்தில் அர்ஜுனன் வில்வித்தையில் சிறந்தவனாக பேசப்பட்டமை குருவான துரோணரின் அதிஉச்ச திறமையே இல்லை என்றால் கர்ணனோ ஏகலைவனோ பேசப்பட்டிருப்பார்கள். அதேபோல் எமது வீரர்களின் திறமைகள் பிராகசமாக இலங்கையில் மிளிர எமது பயிற்றுனர்களின் அங்கீகாரம் முக்கிமானது. அதற்கான ஏற்பாடுகளை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நிறைவு செய்து தரவேண்டும்.  இந்த அக்கடிமியில் இருந்து நிறைய வீரர்கள் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்