Mon. May 6th, 2024

கருங்கல், மணல் மண், கிரவல் அகழ்தல் தொடர்பான வெளியீடு

கருங்கல் , மணல் மண் . கிறவல் மற்றும் களி அகழ்தல் , கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் தொடர்பான அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தனிப்பட்ட தொழில் முயற்சிகளுக்காகவும் சிறிய , சுயதொழில் மற்றும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுபவர்களது பொருளாதார வாழ்வாதார தேவைப்பாடுகளுக்காக நிலவளத்தினை பயன்படுத்திக் கொள்ளல் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மூலங்கள் மற்றும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அவர்களால் 2020.10.06 ஆம் திகதிய 2196/28 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளைக் கருத்தில் கொண்டு , நில வளங்களை அகழ்தல், கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் செய்தல் எனும் செயன்முறையினுள் பொது மக்கள் , தனிப்பட்ட நிறுவனங்களைப் போன்றே சட்ட ரீதியான அரச நிறுவனங்களும் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளை தவிர்த்து சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையொன்றை அடையாளம் காண்பதற்கு 2021.10.05 திகதிய .21 / 1766 / 301 / 022 இலக்க அமைச்சரவைத் தீர்மானத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய இச்சுற்றுநிரூபத்தினை வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நில வளங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலணியினால் புதிய செயன்முறை தொர்பான ஆலோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட “ கட்டிடக் கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் கனிய அகழ்வு , கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் தொடர்பான செயல் தொகுதிக்காக அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு , அதற்கமைய அனைத்து நிறுவனத் தலைவர்களாலும் கருங்கல் , மணல் , கிறவல் மற்றும் களி அகழ்தல் , கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் செய்தல் என்பவற்றை முறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்தல் வேண்டும் . அதன்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக தங்களது விசேட அவதானத்தினைச் செலுத்துதல் வேண்டும் .
01. அகழக் கூடிய இடங்களும் , இடத்தினை அடையாளம் காணலும் நிலவளத்தினை அகழக்கூடிய இடங்கள் தொடர்பாக முன்கூட்டியே அடையாளம் காணுதல் , அவற்றை படமாக்குதல் , அந்நிலவளத்துக்குரிய நிறுவனங்களை அடையாளம் காணல் மற்றும் தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல் ( Clearance ) போன்ற செயற்பாடுகளை மேற்குறித்த நிறுவன கட்டமைப்பொன்றினுள் செயற்படுத்துவதற்கு மேற்குறித்த ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது . அதற்கமைய இதற்குரியதான அனைத்து சட்ட ரீதியான அரச நிறுவனங்களும் தற்போது வரை செயற்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்குப் பதிலாக மேற்குறித்த நடைமுறைகளினுள் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நிருவாக கட்டமைப்புக்களை கட்டியெழுப்புதல் / சீரமைத்தல் வேண்டும் .
02. அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறை ” கட்டிடக் கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் கனிய அகழ்வு , கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் செய்தல் தொடர்பான செயல் தொகுதியின் ” அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய புவிச் சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தினால் செயற்படுத்தப்பட்ட வேலை ஒழுங்குகளை முழுமையாகவே மீள ஒழுங்கமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . அதற்குத் தேவையான தொழிநுட்ப வழிமுறைகளை அடையாளம் காட்டுவதற்கும் . சேவை பெறுநர்களுக்கு வசதிகளைத் திட்டமிடுவதற்கும் , அநாவசியமாக சேவைபெறுநர்கள் சில நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கும் . அவ்வாறே புவிச் சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் கீழ் நிலை உத்தியோகத்தர்கள் வரை ஆலோசனைகள் வழங்கி இச்செயன்முறையை சிறப்பாக ஒழுங்கமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . தீர்மானிக்கப்பட்டுள்ளாறு மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர் . கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கும் அவர்களுக்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்களை வழங்குவதற்கும் உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .
03. அரச காணி உரிமை / முகாமைத்துவத்துடன் தொடர்பான சட்டரீதியான நிறுவனங்களினால் காணிப் பயன்பாட்டுக்கான சுற்றாடல் மதிப்பீட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல் கருங்கல் . மணல் , கிறவல் மற்றும் களி தொடர்பாக செயற்படும் தனிப்பட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுபவர்களது பாரிய பிரச்சனையாக அமைவது பல்வேறு நிறுவனங்களின் தொடர்புடன் பெற்றுக்கொள்ளும்போது அதற்காக அதிக காலத்தினை செலவளிக்கும் நிலை ஏற்படுவதும் , சில அனுமதிகளுக்காக நிறுவனங்களின் பிரதான அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதுமாகும் . பெருமளவான நிறுவனங்களில் சான்றிதழ்கள் ( Clearance ) வழங்குவதற்காக பல்வேறு தொகுதிச் செயன்முறைகளை செயற்படுத்துவதனையும் காணக் கூடியதாக உள்ளது . இது தொடர்பாக அதிக அவதானத்தை செலுத்த வேண்டியதோடு சுற்றாடல் பாதுகாப்புக்காக அவதானத்தைச் செலுத்தி இச்சான்றித் வழங்கும் செயற்பாட்டை இலகுபடுத்துவதற்காக சட்ட ரீதியான நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . அவ்வாறே ஜனாதிபதி செயலணியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் உரிய சான்றிதழ்கள் அல்லது சுற்றாடல் சான்றிதழ்களை வழங்குவற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . சில சந்தர்ப்பங்களில் இது தொடர்பாக தற்போது நிலவுகின்ற ஒழுங்கு விதிகள் , வர்த்தமானி அறிவத்தல்கள் , சுற்றுநிரூபங்களை திருத்தம் செய்வதற்கும் இடம் உண்டு . அதற்குத் தேவையான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளமையினால் அத்தகைய திருத்தங்கள் இருப்பின் அவற்றை உடன் பூர்த்தி செய்வதற்குரிய சட்ட ரீதியான அரச நிறுவனத் தலைவர்களால் செயற்படுத்தப்படல் வேண்டும் . 04.கட்டணங்கள் அறவிடல் . மீளச் செலுத்துதல் மற்றும் கணக்கிலிடல் சேவை பெறுநர்களுக்கு வசதிகள் மற்றும் இலகு சேவையொன்றை வழங்கும் நோக்கத்துடன் நில வள அகழ்வுக்காக தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களினாலும் அறவிடப்படுகின்ற கட்டணங்கள் மேற்குறித்த செயன்முறையொன்றுக்கு கோவையிடப்பட்டுள்ளது . அதற்கமைய அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னர் உரிய அனைத்து அரச நிறுவனங்களுக்காகவும் கட்டணங்கள் அறவிடல் புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டியதோடு . அப்பணம் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள அனுமதிக்கப்பட்ட செலவுத் தலைப்புக்கு வைப்பிலிடப்படல் வேண்டும் . நிதி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து நிறுவனத் தலைவர்களும் செயற்பட வேண்டுமென இத்தால் ஆலோசனை வழங்குகிறேன் . அவ்வாறே , அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட கட்டிடிக் கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் கனிய அகழ்வு கொண்டு செல்லல் மற்றும் வியாபாரம் தொடர்பான செயற்தொகுதியின் ஊடாக குறிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் தவிர்ந்த அதற்குரியதாக
நிதி அமைச்சின் செயலாளரது உடன்பாடின்றி வேறு கட்டணங்களை உருவாக்க அல்லது திருத்தம் மேற்கொள்ளாதிருப்பதற்கு பொறுப்பாயிருத்தல் வேண்டும் .
05. சுற்றாடல் பிரச்சினைகள் , பொதுமக்கள் எதிர்ப்புகள் மற்றும் மேற்பார்வை நில வளங்களை அகழும்போது சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் அதற்கமைய பொதுமக்கள் எதிர்ப்புகள் உருவாகுவதும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும்போது நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பின்மை நிலவுவதாகவும் தோன்றுகிறது . அத்தகைய நிலைமை அரசின் விசேட ஒழுங்கமைப்பு செயற்பாடுகள் மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை முறையாக முகாமைத்துவம் செய்வதில் இடையூறாக அமையும் . எனவே இது தொடர்பாக ஜனாதிபதி செயலணி வழங்கியுள்ள சிபாரிசுகளை செயற்படுத்துவதற்கும் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனவும் இத்தால் ஆலோசனை வழங்குகிறேன் . இதற்காக மாவட்ட மற்றும் தேசிய ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக்குழு உடன் கூடி தீர்மானங்களை எடுக்க வேண்டுமெனவும் அறியத்தருகின்றேன் . அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்குறித்த ஒழுங்குமுறைகளுக்காக இயலுமான ஒத்துழைப்பினை அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியான வேலைத்திட்டம் மற்றும் மேற்பார்வையொன்று சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு இதன்போது யாதேனும் சட்ட ரீதியான அரச நிறுவனம் ஒன்று தேவையான ஒத்துழைப்பினை வழங்காது விடின் அது தொடர்பான முழு அறிக்கை ஒன்றை எனக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்