Sun. May 19th, 2024

எதிர்வரும் 1ம் திகதி முதல் தனியார் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதி

சுகாதார வழிகாட்டலுக்கமைய தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கான அனுமதிகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அறிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கான அனுமதிகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருந்த தனியார் மேலதிக வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கூறினார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் குறித்த கற்றல் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்