Wed. Apr 24th, 2024

மாற்றுத் திறனாளிகளுக்கான வண்டிகள் வழங்கி வைப்பு

கோப்பாய் பிரதேச தேசோதய சபை ஹொலண்ட் நாட்டவா்  ஒருவாின் உதவியுடன் 
மாற்றுத்திறனாளிகளுக்கு  பெறுமதி மிக்க    முச்சக்கர வண்டிகள் வழங்கி வைத்தமைக்காக சபை தலைவா் தேசாபிமானி மயில்வாகனம் நன்றி தொிவித்துள்ளார்.
 
2019  – போா்  ஒய்வுக்குப் பின்னா்  வடக்கில் பெரும்பாலாக இனம் காணப்பட்டவா்கள்  மாற்றுத்திறனாளிகளுக்கே இவ்வுதவி வழங்கப்பட்டது. 
 
இவ்வாறு மாற்றுத்திறனாளிகளாக இனம் காணப்பட்டவா்களுக்கு  அரசின் உதவி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில்  இன்று  எம்மவா் அன்பு உறவுகளே  பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளிகளை இனம் கண்டு உதவுவதன் மூலமே  அவா்கள் கவலைகளை மறந்த வாழ்ந்த வரகின்றனா் என கோப்பாய் பிரதேச தேசோதய சபைத் தலைவா் தேசாபிமானி  இ.மயில்வாகனம் தொிவத்தாா்.
 
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியில் உதவி எனும் திட்டம் கோப்பாயில் முன்னெடுக்கப்பட்டது.
 
இதில் கலந்து  கொண்ட  ஏற்பாட்டாளா்  இ. மயில்வாகனம் மேலும் தொிவக்கையில். யாழ். மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெயா் விபரங்களை  ஹொலண்ட்  நாட்டில் உள்ள செல்வி மு.லலிதா எம்மிடம் கோாியிருந்தாா்.
 
இதன்பிரகாரம் முதற்கட்டமாக 8 பேருக்கான உதவியை  வழங்கியிருந்தாா். இதன் ஊடாக கடந்த புதன்கிழமை  13.10.2021 இனம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  கோப்பாய் பிரதேச தேசோதய சபை அலுவலகத்தில் வைத்து உதவிகளை  வழங்கியிருந்தோம்  பயனாளிகள் உதவியை  பெறும் போது கண்ணீா் மல்க தமது நன்றிகளை ஹொலண்ட் நாட்டு தமிழ்ப் பெண்மணியான செல்வி மு.லலிதா அவா்களுக்கு வழங்கியதை  காணக்கூடியதாக இருந்தது,
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசாபிமானி சமூக ஆா்வலா் சா. தவசங்காி, சமூக ஏற்பாட்டாளா் தேவராஜா ரமணதாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.


Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்