Mon. May 6th, 2024

இறக்குமதி பொருட்களுக்கு உத்தரவாதம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் செய்யவேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மொபைல் போன் , தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளிர்சாதன பெட்டி, ரப்பர் டயர்கள், பழங்கள், குளிரூட்டிகள், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட 623 எச்எஸ் குறியீடு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய வங்கி 100 வீத உத்தரவாத தொகையை அறிவித்திருக்கிறது.
மத்திய வங்கியின் இந்த அறிவிப்பினால் மேற்படி பொருட்களுக்கான இறக்குமதியில் தாக்கம் ஏற்படும் அதேசமயம் அந்தவகை பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் உட்பட இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டுமென மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்