Fri. Apr 26th, 2024

தமிழில் ஏ எடுத்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு

வடக்கு மாகாணத்தில் தமிழ் பாடத்தில் அதிவிசேட சித்தியை பெற்றவர்களுக்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினரால் ஊக்குவிக்கு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ஐ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிவிசேட சித்தி பெற்ற வடக்கு மாகாண மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் திட்டத்திற்கான கடிதங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய பயணத் தடை காரணமாக கடிதங்கள் தாமதமாக கிடைக்கப் பெற்றாலும் முடிவுத் திகதி குறித்து கவலை கொள்ளாது உரிய அறிவுறுத்தலின்படி விண்ணப்பப் படிவங்களை நிரப்பி மீண்டும் அனுப்பி வைக்கவும். மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் சுய முகவரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் 2019 உயர்தரத்தில் தமிழ் பாடத்தில் ஏ சித்தி பெற்று குறித்த கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் 0778449739 அல்லது 0772222024 இன்னும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வங்கியில் வைப்புச் செய்யப்படுவதுடன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் மேன்மேலும் ஊக்குவிப்புத் தொகை வங்கியில் வைப்புச் செய்யப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்