Tue. May 7th, 2024

கர்ப்பத்தை ஒருவருடம் தள்ளிப்போட கோரும் சுகாதார நிபுணர்கள்

டெல்டா கோவிட் மாறுபாடு பரவுவதால் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் பெண்களுக்கு அறிவுறுத்ல் விடுத்துள்ளார்கள் .

டெல்டா மாறுபாடு காரணமாக தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டி சொய்ஸா மகப்பேறு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹர்ஷா அத்தபத்து சுகாதார மேம்பாட்டு நிலையத்தின் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்

“புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் ஏற்கனவே குழந்தைகளைப் பெற்ற பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவும், முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துங்கள் . கோவிட் ஒரு புதிய நோய். எங்களுக்கு இப்போது அது தொடர்பாக குறைந்த அளவு விடயங்களே தெரியும் . ஒரு வருடம் கழித்து, நாங்கள் இந்த வைரஸ் தாய்மார்களையும் குழந்தைகளையும் எப்படி பாதிக்கும் என்று மேலதிக தகவல்களை பெறுவோம் மேலும் அதற்குள் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளும் கிடைக்கலாம், “என்று அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்