Mon. Apr 29th, 2024

ஹாட்லிக் கல்லூரியில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் – பழைய மாணவர்களின் பாராட்டத்தக்க செயல்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டமொன்றை கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர்களால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆவணி மாதத்திலிருந்து இத்திட்டத்தை பாடசாலையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும்,  பாடசாலைக்கு பலர் காலை உணவை உட்கொள்ளாமல் வருவதையும் அவதானித்து, இத்திட்டம் நடைபெற்று வருகின்றது. போசாக்கு என்பது மாணவர்களின் அடிப்படைத் தேவை. போசாக்கிருந்தாலே விளையாட்டு, கல்வியில் ஆர்வம் மற்றும் சோர்வுத்தன்மையின்மையினால் உடலாரோக்கியம் மற்றும் உள ஆரோக்கியம் மேம்படும். கல்லூரியில் சுமார் 1200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இவ்வாறான செயற்றிட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்