Mon. Apr 29th, 2024

யாழ் மாவட்ட NAITA வின் ஏற்பாட்டில் நாடுமுழுவதும் 3000 பேரை தொழிற்பயிற்சிக்கு இணைக்கும் செயற்றிட்டம் இன்று அங்குரார்ப்பணம்

யாழ் மாவட்ட NAITA வின் ஏற்பாட்டில் நாடுமுழுவதும் 3000 பேரை தொழிற்பயிற்சிக்கு இணைக்கும் செயற்றிட்ட நிகழ்வின் யாழ் மாவட்ட ரீதியான அங்குரார்ப்பண நிகழ்வு  இன்று 03.01.2022 யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பிரதம அதிதியாக யாழ்ப்பாண பிரதேச சகயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சோபிகா ரொபின்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திறன்கள் விருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் த.நீலாம்பரம் அவர்களும் செயற்றிட்டத்தின் விளக்கவுரையை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஜெ.துசாந்தன் அவர்கள் நிகழ்த்தினார். இதன் பிரகாரம் 5கற்கை நெறிகளுக்காக 125இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு 06 மாதகால நிறுவன ரீதியான தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு தேசிய தொழிற்றகைமை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்