Mon. Apr 29th, 2024

முள்ளி கட்டடம் கையளிக்கும் நேரத்தில் மாற்றம்

தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நாளை 9 மணிக்கென அறிவிக்கப்பட்ட நிகழ்வே பிற்பகல் 2 நடைபெறவுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகார இராஜாங்க அமைச்சின் தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் க.த.ஐங்கரன் அவர்களின் இணைப்புடன் வடமராட்சி உள்ளிட்ட அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களை கழிவுகள் அற்ற நகராக மாற்றுகின்ற உயர்ந்த நோக்குடன் கரவெட்டி  முள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறை சேதனப் பசளை தயாரிப்பு நிலையமானது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகார இராஜாங்க அமைச்சர் ரொக்சன் ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எச்.எம். சாள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்