Fri. Mar 29th, 2024

Zoomல் கற்றல் – பிள்ளைகளைகளில் உடல், உள நலத்தில் கவனமெடுக்குமாறு ப.தர்மகுமாரன் வேண்டுகோள்

Zoom வகுப்பில் பிள்ளைகளின் உடல்நலத்தையும் உளநலத்தையும் பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய சூழலில் வகுப்பறை கல்வி முடக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்னும் நிலையில் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் Zoom வகுப்பு நடைபெற்று வருகின்றது.

இது கல்வியை ஊட்டுவதற்கு சிறந்த பொறிமுறையாக இருந்தாலும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் நேர காலமின்றி பிள்ளைகளை தொடர்ச்சியாக ஒய்வின்றி Zoom வகுப்பில் இருத்தி வருன்றனர். இதன்மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும். அதேவேளை பாடசாலை ஆசிரியர்களும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு பெற்றோரை வழிப்படுத்த வேண்டும். ஏனெனில் பாடசாலைகள், வலயக்கல்வி பணிமனை, தனியார் கல்வி நிலையகள், இலவசவகுப்புக்கள் என பலவகையான வகுப்புக்கள் நடைபெறுகின்றது. இதனை பெற்றோர்கள் வரையறைப்படுத்தி கற்றல் செயல்பாட்டுக்கு பிள்ளைகளை அமர்த்த வேண்டும். இல்லையேல் “பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான” கதையாய் முடிந்துவிடும். எனவே கல்வி என்பது கட்டாயமானது. அதனை எந்த சூழலிலும் இழந்து விடமுடியாது. ஆனால் பிள்ளைகளின் ஆரோக்கியமும் ஆளுமையும் சிதைந்து விடாது பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் தார்மீக கடமையாகும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்