Sat. May 4th, 2024

மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்துங்கள் – ப.தர்மகுமாரன் கோரிக்கை

பாடசாலை மாணவர்கள்  காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பலரும் அக்கறை காட்ட வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர். தர்மகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.                    பாடசாலை மாணவர்கள் பலர் காலை உணவை தவிர்த்து வருவதை சுகாதார கழகங்கள் இனம்கண்டுள்ளன. இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிப்புக்கு உள்ளாவதுடன் கற்றலிலிலும் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுகின்றார்கள். காலை உணவை தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்களாக நேரம் போதாமை  காலையில் சாப்பிடமுடியாது  தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று வருதல் போன்றனவும்,  வறுமை நிலை பொருளாதார பிரச்சனையாலும் உணவை உட்கொள்ள முடியாது போவதுடன் பாடசாலையின் மதிய உணவை நம்பிவரும் மாணவர்கள் கிராம புறபாடசாலைகளில் அதிகம் உள்ளனர்.  எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களின்  நலன் கருதியும் எதிர்காலத்தை கருத்தில்  கொண்டும் கல்வி செயல்பாட்டை ஆரோக்கியமாக கொண்டு  செல்வதற்கும் பாடசாலை நிர்வாகம் காலை உணவை உட்கொள்வதற்கு வசதி வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். இல்லையேல் மாணவர்களின் உடல்நலம் உளநலம் பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் கல்வி இனைபாடவிதான செயல்பாடுகள் ஆளுமை என்பன வினைதிறன் அற்றதாகவும்  ஆரோக்கியம் மற்ற மாணசமூகமே உருவாக வழிசமைக்கும் என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்