Fri. Apr 26th, 2024

மாணவர்களிடமிருந்து பண அறவீடு தொடர்பானது

பாடசாலைக்கு க.பொ.த. உயர்தர வகுப்பிற்கு புதிதாக சேரும் மாணவர்களிடமோ அல்லது க.பொ.த.சாதாரண பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களிடமிருந்தோ இலங்கை கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பணம் தவிர மேலதிகமாக பணமாகவோ அல்லது அன்பளிப்பு பொருட்களாகவோ வசூலிக்கும் அதிபர்கள் தொடர்பாக நேரடியாக தமக்குத் தெரியப்படுத்திக் கொள்ளுமாறு வடமாகாணத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

உயர்தரத்திற்கு புதிதாக இணையும் மாணவர்கள் மற்றும் உயர்தரத்திற்கு வேறு பாடசாலைக்கு செல்லும் மாணவர்களிடம் சில அதிபர்கள் பாடசாலைகளுக்கு உதவிகளை செய்து தந்தால் மட்டுமே விடுகைப் பத்திரங்கங்கள் வழங்க முடியும் என குறிப்பிடுவதாக சில ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பணம் வசூலிப்பதற்கு அனுமதி உண்டு. இதற்கு முறையான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு கணக்குகள் பேணப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் மாணவர்களிடமிருந்து பணமாகவோ அல்லது ஏதேனும் பொருட்களாகவோ அறவிடப்படுவது தொடர்பாக நேரடியாக எமக்கு தெரியப்படுத்தினால் குறித்த அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்