Wed. Apr 24th, 2024

மாசடையும் வளி – முகக் கவசங்கள் அணியுங்கள்

இந்திய வளி மாசடைந்த தாக்கத்தினால் இலங்கையில் வளி மாசடைவது கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து வருகின்ற மாசடைந்த காற்றின் காரணமாக, இலங்கையின் வளிமண்டலத்தில் மாசடைந்த வளி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வளி தர சுட்டெண் 200க்கும் அதிகமாக இலங்கையில் பதிவாகியுள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் வளி தர சுட்டெண் 212 ஆகவும், கம்பஹாவில் 189ஆகவும், தம்புள்ளையில் 179 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தொட்டையில் 157 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதன்படி, தலைநகரில் காற்று மாசுவின் அளவு சாதாரண அளவை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மக்கள் முகக்கவசத்தை அணிந்துக் கொள்வது பாதுகாப்பானது என்று, வளி தரம் குறித்து கண்காணிக்கு இலங்கையின் கட்டிட ஆய்வு பணிமனை தெரிவித்துள்ளது.
இதே நிலை நேற்று (07) நிலவியதுடன், காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்திய குடாநாட்டில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்