Wed. Apr 24th, 2024

VADA – HEROES கிண்ண கால்பந்தாட்டம் றேஞ்சஸ் இறுதிக்குள் நுழைந்தது

பரபரப்பான ஆட்டத்தில் இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது கொற்றவத்தை றேஞ்சஸ் அணி.
வடமராட்சி லீக்கின் அனுமதியுடன் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி மஅணிகள் மோதும்
வட- ஹீரோஸ் உதைபந்தாட்ட தொடரின்  அரையிறுதி ஆட்டத்தில் கொற்றவத்தை றேஞ்சஸ் அணி வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் நேற்று நடைபெற்றது. அரையிறுதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணிகள் மோதியது. பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில் ஆரம்பமாகியது ஆட்டம்.இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் மிகவும் வேகமாக காணப்பட்டது. இரு அணிகளும் கோல்களை பெறும் நோக்கோடு ஆட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தது . ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் சாந்தன் ஒரு கோலைப்போட 1:0 என்ற கோல் கணக்கில் றேஞ்சஸ் அணி முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்ட ஆரம்பத்தில் இரு அணிகளும் புதிய உத்வேகத்துடன் ஆடியது. இரு அணிகளும் பந்தினை மாறி மாறி தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இரு அணிகளும் கோல்களை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும் கோல் பெறும் சந்தர்ப்பங்கள் பின்கள வீரர்களினால் சிறப்பான முறையில் தடுக்கப்பட்டன. ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் றேஞ்சஸ் அணி வீரர் வர்மன் தனது அணிக்கான கோலைப் பதிவு செய்ய ஆட்டம் மிகவும் வேகமாக நடைபெற்ற வண்ணம் இருக்கையில் ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் கலைமதி அணிக்கு தண்டனை உதை கிடைத்து. அதனை கலைமதி அணியின் விது கோலாக மாற்றினார்.
கலைமதி அணி கோல் பெற்றதும் மேலும் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் பரப்பை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. ஆனாலும் றேஞ்சஸ் அணியின் கோல் காப்பாளர் மற்றும் பின்கள வீரர்களினால் கோல் பெறும் சந்தர்ப்பங்கள்  தவிடுபொடியாக்கப்பட்டது. இறுதியில் ஆட்டநேர முடிவில் றேஞ்சஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
சிறந்த ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் வர்மன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்