Mon. Apr 29th, 2024

போதைப்பொருள் தடுப்பு பயிற்சி செயற்றிட்டத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

போதைப்பொருள் தடுப்பு பயிற்சி செயற்றிட்டத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
போதைப்பொருளிலிருந்து எவ்வாறு விடுபடுவது தொடர்பான வழிப்படுத்தல்களை வழங்கும்  பிரதான நோக்கில் கடந்த ஆறு மாத காலமாக zoom தொழில்நுட்பம் ஊடாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன்  போதைப்பொருள் பாவனையினால் எமது சமூகம் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, இதனை தடுக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளதாக குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ். முரளிதரன்,மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர் திரு. புகுது குமணசேகர, சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு.ஏ.சி. ரஹீம்(ADIC), வடக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திரு.ஏ.கோடிஸ்வரன்(ADIC), நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எஸ்.நிதர்சனா(ADIC) மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்