Mon. Apr 29th, 2024

புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தடை

தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் நடததுவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதி  நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2015.08.12 ஆம் திகதியும் 1927/49 இலக்கமும் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக திருத்தம் செய்யப்பட்ட 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளையின் பிரகாரம்,
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சைக்குரிய 14.12.2022 நள்ளிரவு 12.00 மணிமுதல் முழுமையாக பரீட்சை நிறைவடையும் வரைக்கும்
பரீட்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புக்கள் ஒழுங்கு செய்தலும் இவ்வகுப்புக்களை நடாத்துதல்,  பாடஇணை விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.
* மேற்படி பரீட்சைக்காக ஊக வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல்,
• பரீட்சை வினாப்பத்திரங்களிலுள்ள வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாக சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தல் அல்லது அவ்வாறனவைகளை தம்முடன் வைத்திருத்தல் ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்