Mon. May 6th, 2024

பி பிரிவில் சண்டிலிப்பாய் இந்து அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி. 

தெல்லிப்பளை மின்னலடியாக்கி  விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும் யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடரில் பி பிரிவினருக்கான ஆட்டத்தில் சண்டிலிப்பாய் இந்து விளையாட்டு கழக அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் நேற்று  குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இதில் பி பிரிவினருக்கான அரையிறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்து அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி பி அணி மோதியது. 5 சுற்றுக்கள்  கொண்ட போட்டியில் முதலாவது சுற்றில்
புத்தூர் கலைமதி பி அணி 25:17என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த சுற்றுக்களில் ஆ
சண்டிலிப்பாய் இந்து அணி25:23, 25:19, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்