Tue. Apr 30th, 2024

பருத்தித்துறையில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 பேர் சுயதனிமைப்படுத்தலில்

கொரோனா அறிகுறிகளுடன் பிசிஆர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி விட்டு அதுபற்றி தெரிவிக்காது தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் ஊடாக வெளியிடப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று ஏற்பட்ட வரை பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஜென்சன் றொனால்ட் மற்றும் சுதாகரன் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையில்
தொற்று ஏற்பட்டவரின் வீட்டில் மரணச்சடங்கு இடம் பெற்றமையும் அதில் இறந்தவரின் மகன் ஆகிய குறித்த வங்கி அதிகாரி கலந்து கொண்டு இறுதி கிரியைகளில் ஈடுபட்ட மையும் தெரியவந்ததைத் தொடர்ந்து குறித்த தொற்றாளரான வங்கி ஊழியரும் அன்றைய தினம் இறுதி கிரியைகளை நடத்திய குருக்களும் மரண வீட்டில் மேள வாத்தியங்கள் மற்றும் ஏனைய உதவிகளில் அருகில் இருந்து ஈடுபட்டவர்கள் என 30 பேர் வரையில் பருத்தித்துறை பகுதியில் சுய தனிமைப்படுதலுக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் உட்படுத்தப்பட்டனர் இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் பத்து நாட்களின் பின் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரணச் சடங்கில் 15 பேருக்கு மேல் கலந்து கொள்ளாது இருக்க வேண்டுமென அறிவுறுத்தியும் இவ்வாறு பெருமளவான மக்கள் ஒன்று கூடுவது இவ்வாறான தேவையற்ற ஆபத்துகளை தோற்றுவிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்