Fri. Apr 26th, 2024

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் – கரவெட்டி பிரதேச செயலாளர் காட்டம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை இலங்கை போக்குவரத்துச் சபை உடனடியாக சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இல்லையேல், குறித்த மலசல கூடம் மூடப்படும் என கரவெட்டிப் பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஷநாதன் தெரிவித்துள்ளார்.

நெல்லியடி பஸ் தரிப்பிடற்கு அருகாமையில் துப்பரவின்றி காணப்படும் மலசல கூடத்தை கரவெட்டிப் பிரதேச சபையினர் கையகப்படுத்தி சுகாதார முறைப்படி பேண வேண்டும் இல்லையேல் கரவெட்டி பிரதேச சபைக்கு முன்பாக பொது மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நேரிடும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
துப்பரவின்றி காணப்படும் மலசல கூடத்தால் பல மாவட்டங்களுக்கு பிராயாணத்தை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்கொள்கின்றனர்.
நெல்லியடி பஸ் தரிப்பிடற்கு அருகாமையில் உள்ள மலசல கூடம் இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை துப்பரவு செய்ய வேண்டிய பொறுப்பும் அவர்களையே சாரும். ஆனால் இது தொடர்பாக போக்குவத்துச் சாலை முகாமையாளருக்கு பல முறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கரவெட்டி பிரதேச சபை செயலாளரர் கணேசன் கம்ஷநாதன் அவர்களிடம் கடந்த கிழமை தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த விடயம் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளரிடம் கலந்துரையாடப்பட்டது. இதில் மலசல கூடத்தை துப்பரவு செய்வதற்கு விலை மனு கோரியுள்ளோம். இதற்கு அவர்கள் அனுமதி தந்தால் நாம் துப்பரவாக வைத்திருக்க முடியும்.
அவ்வாறில்லாமல் துப்பரவு செய்யும் பொறுப்பை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டால் கழிவகற்றும் பொறுப்பை கரவெட்டி பிரதேச சபை மேற்கொள்ளும் அதற்குரிய கட்டணத்தை இலங்கை போக்குவத்துச் சபை செலுத்த வேண்டும். மேற்குறித்த இரண்டு விடயங்களும் செய்ய முடியவில்லையாயின் குறித்த மலசல கூடம் அமைக்கப்பட்ட பகுதியை மாத்திரம் கரவெட்டி பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தால் கரவெட்டி பிரதேச சபை நிதியில் முழுமையாக பராமரிக்கும் எனவும் அத்துடன் பிரதேச சபைக்கு கட்டணம் தருவதாக கூறியபடியால் இரண்டுமாதங்கள் பராபரித்தோம் ஆனால் அவர்கள் அந்த கட்டணத்தை செலுத்தாதபடியால் தாம் பராமரிப்பு நடவடிக்கையை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை. எனவே குறித்த மலசல கூடத்தை உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால் ஒரு மாத கால அவகாசத்தில் மூடப்பட்டு கரவெட்டி பிரதேச சபை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்