Thu. May 2nd, 2024

நாளை சூரிய கிரகணம் யாழில் தெரியும் நேரம்

சூரிய கிரகணம் நாளை (25) ஏற்படும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் முழுமையாக 22 நிமிடங்களுக்குத் தெரியும் எனவும் கொழும்பில் மாலை 5.43 மணி முதல் 5.52 மணி வரை மட்டுமே அவதானிக்க முடியும்.

சூரிய கிரகணத்தின் அதிகபட்ச கிரகணம் மாலை 5.49 மணிக்கு நிகழும், அதன் முடிவு மாலை 6.20 க்கும் நிகழும்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை, பகுதி கிரகணம் மாலை 5.27 மணிக்குத் தொடங்குகிறது, அதிகபட்ச கிரகணம் மாலை 5.46 மணிக்கு 8.8% சூரியன் சந்திரனால் மூடப்பட்டிருக்கும். மாலை 6.20 மணிக்கு கிரகணம் நிறைவடைந்தாலும், மாலை 5.49 மணிக்கு சூரியன் மறையும் வரை மட்டுமே இந்த கிரகணத்தை 22 நிமிடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் காண முடியும்.

லட்சத்தீவு மக்களுக்கு குறைவாகவே தெரியும்.என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்