Sat. Apr 20th, 2024

தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனையைப் பதிவு செய்தனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் காலியில் நடைபெற்றது.
இதில் வடமாகாண வடமராட்சி கல்வி வலயத்தை பிரதிநிதித்துவம் செய்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி  அணி முதலாவது போட்டியில் மஹகமசேகர அணியையும், காலிறுதியில் போபிட்டிய அணியையும், அரையிறுதிப் போட்டியில் ரக்காவா அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து
விஜயபா குங்கம அணி மோதியது. இதில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி 2:0 என்ற செற்கணக்கில் தேல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பல ஆண்டுகளாக தேசிய மட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், வெற்றி வாய்ப்புக்கள் நழுவ விடப்பட்டன. ஆனால் இவ்வாண்டு அயராத பயிற்சியாலும், விடா முயற்சியாலும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனையைப் பதிவு செய்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்