Mon. May 6th, 2024

நாட்டின் சமாதானத்தை வலியுறுத்தி மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதம் 50 ஆவது நாளான இன்று நிறைவு

 

நாட்டில் சமாதானம், ஏற்படவும்,சாதி,மத,இன,மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், நாட்டில் சுதந்திர தினமான கடந்த பெப்பிரவரி மாதம் 4 ஆம் திகதி  மன்னாரில் சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி 50 நாட்கள் தொடர்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள நிலையில் அவருடைய உண்ணாவிரதம் இன்று செவ்வாய்க்கிழமை(24) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கையின் சுதந்திர தினமான கடந்த பெப்பிரவரி மாதம் 4 ஆம் திகதி  மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து   தவம் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வந்தார்.
-தொடர்ச்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த நிலையில் சுமார் 50 ஆவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
-உண்ணாவிரதம் நிறைவு செய்யும் நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கண்ணண் குருக்கள், மூர்வீதி ஜூம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான் ,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை நீர் ஆகரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.
குறித்த உண்ணாவிரதம் கடந்த 22 ஆம் திகதி (22-03-2020) மதியம் 12 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட இருந்தது.
எனினும் நாட்டின் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி யின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்