Thu. May 2nd, 2024

தொற்று உறுதி வடமராட்சியில் மேலும் ஒரு பாடசாலை மூடு

RAT பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரின் பிள்ளைகள் கல்வி கற்ற பாடசாலை மற்றும் 32 மாணவர்கள், 4 ஆசிரியர்கள்  தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கையில் பருத்தித்துறை சுகாதார பணிமனை மேற்கொண்டு வருகிறது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வியாபாரிமூலை பகுதியில் உள்ள பாடசாலையும் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களும் தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது
அல்வாய் வடக்கைச் சேர்ந்த
மூதூர் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஒருவருக்கு RATபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 19 ம் திகதி முதல் 6ம் திகதி வரை அல்வாய் வடக்கு  பகுதியில் தங்கியுள்ளார். இதனால் குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நடமாடிய இடங்களின் தகவல்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் அவர்களினால் சேகரிக்கப்பட்டது. இதில் குறித்த தொற்றாளரின் பிள்ளைகள் தற்போது வியாபாரிமூலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு கற்றல் நடவடிக்கைக்காக கடந்த 5,6,7ம் திகதிகளில் சென்றமை தெரியவந்துள்ளது.  இதனையடுத்து குறித்த பாடசாலை மற்றும் 32 மாணவர்களும், 4ஆசிரியர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவருக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் அதிபர் ஏற்கனவே புலோலி தொற்றாளர் சென்றுவந்த தொலைத்தெடர்பு சேவை நிலையத்துக்கு சென்றதால் தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்