Mon. May 6th, 2024

தீருவில்லில் நிகழ்வு நடத்த எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு தடை பலரும் விசனம்

தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபையால் தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களினால் அனுமதி கோரப்பட்டது. ஆனால் வல்வெட்டித்துறை நகரசபையால் தீருவில் பொதுப்பூங்காவில் நிகழ்வு நடாத்துவதற்கான அனுமதி கோரல் தொடர்பாக தங்களின் 23.11.2021 ம் திகதிய கோரிக்கை கடிதம் சார்பாக இம்மாத இறுதிவரை தீருவில் பொதுப்பூங்காவில் எந்த ஒரு நிகழ்வினையும் நடாத்த வேண்டாமென வல்வெட்டித்துறை வல்வெட்டித்துறை பொலீஸ் உத்தியோகத்தரினால் அறிவுறுத்தப்பட்டமையால் தங்களது கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க முடியாதுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் என வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் ச.செல்வேந்திரா கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டமைக்கே பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
பொலீஸாரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு போடப்பட்ட கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தவிசாளர் தடை விதிப்பது எந்த வகையில் நியாயம். அத்துடன் கடிதத்தில் குறிப்பிடும் போதே சிவாஜிலிங்கம் அவர்களால் 23 ம் திகதி போடப்பட்ட கடிதம் எனவும், அதற்கு பதிலளிக்கும் கடிதம் 22ம் திகதி என போடப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றாமல் பொலீஸாருக்கு சேவையாற்றுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்