Mon. Apr 29th, 2024

திருவிழாக்கால உணவுப்பொருள் வியாபாரத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு

திருவிழாக்கால உணவுப்பொருள் வியாபாரத்தில்
உணவுப் பாதுகாப்பு குறித்து அதிக கரிசனை செலுத்தவேண்டும்.
மேற்பார்வ பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
பூநகரி பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் திருவிழாவி்ல் விழாக்கால உவுப்பொருள் வியாபாரத்திலீடுபடுவோர் உணவுப்பாதுகாப்பு குறித்து அதிக கரிசனை செலுத்தவேண்டும். இதனால் மக்களின் ஆரேக்கியம் பாதுகாக்கப்டுவதோடு வியாபாரத்தையும் சிறப்பாக நடத்த முடியும் என பூநகரி பிரசே மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்தார்.
எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதியிலிருந்து பங்குனி இரண்டாந்திகதிவரை புனித பாலைதீவு அந்தோனியார் திருத்தல விழா இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன.
அங்கு உணவு விற்பனை மற்றும் அன்னதான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளவர்களை அறிவுறுத்தும் கூட்டமொன்று அண்மையில் பூநகரி பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் பாலதீவில் விழாக்காலத்தில் உணவுப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் பூநகரி பிரதேச சபையின் தற்காலிக அனுமதி, நிரந்தரமாக உணவு விற்பனையில் ஈடுபடும் பிரதேசத்தில் பெற்ற இந்த ஆண்டுக்கான அல்லது கடந்த ஆண்டுக்கான அனுமதிப் பத்திரம் என்பவற்றை வைத்திருப்போடு ஒருவருடத்துக்குள் பெற்ற உணவுகையாளுபவர்களுக்கான மருதுவச் சான்றிதழ் பெற்வர்களே உணவுகையாள முடியும். மேலும் உணவு கையாளுபவர்கள் தனிநபர் பாதுகாப்பு அங்கிகளைப் பொருத்தமான முறையி்ல் அணிவதோடு உணவு மாசடையாத வகையில் கொள்கலன்கள் அலுமாரிகளைப் பேணவேண்டும். பொருத்தமான விதத்தில் கைகழுவும் வசதியும், கழிவுப்பொருள் முகாமைத்துவத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
தனிநபர் சுகாதார்தை உயர்ந்த மட்டத்தில் பேணுவதோடு பொலுத்தீன் பாவனையை தவிர்ப்பதும் சிறந்தது. அத்துடன் பொதுமக்கள் பெருமவில் கூடும் பொது இடமாதலால் புகைப்பொருள் மதுான பாவனையும் தவிர்க்கப்ட வேண்டும் என்றார்.
பாலைதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கான முன்னாயத்த ஒழுங்குகளை கத்தோலிக்க திருச்சயை,பூகரி பிரசே செயலகம்,பூநகரி பிரசே சபை,பூகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,கடற்படை, இராணுவம்,பொலிஸ் மற்றும் கடற்தொழிலாளர் அமைப்புகள் இணைந்து மேற்ொணடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்