Mon. Apr 29th, 2024

இசைக் குயில் கில்மிஷாவிற்கு வடமராட்சியில் கெளரவிப்பு

Zee தமிழ் சரிகமப வெற்றியாளர் இசைக் குயில் கில்மிஷாவிற்கு வடமராட்சியில் கெளரவிப்பு நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வட அல்வாய் இளங்கோ சன சமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Zee தமிழ் சரிகமப வெற்றியாளர்
இசைக் குயில் கில்மிஷாவிற்கு வடமராட்சியில் கெளரவிப்பு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வட அல்வாய் இளங்கோ சன சமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் யாழ் கல்வி வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான முருகேசு அநாதரட்சகன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சியாமளாங்கி கருணாகரன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த சாதனையாளர் நிகழ்வில் வடமராட்சியில் இசைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்