Fri. May 3rd, 2024

தனியார் கல்வி நிறுவனங்கள் 25முதல் ஆரம்பம்

தனியார் கல்வி நிறுவனங்களை எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் அபேல குணவர்த்தன அறிவித்துள்ளார். மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் உயர்தர மற்றும் தரம் 11 வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை முதல் கட்டமாக ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். இதில்  ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 பேர் அல்லது 50% இருக்கை அளவிலான மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய வகுப்புக்கள் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வகுப்புக்களை எவ்வாறு நடாத்துவது மற்றும் கடினமான நேரத்தில் வகுப்பறைகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருவாரங்களுக்குப் பின்னர் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்