Fri. May 17th, 2024

கொழும்பில் இருந்து வந்தவர் நெல்லியடியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

கொழும்பில் இருந்து வருகை தந்த ஒருவரை கரவெட்டி சுகாதார பணிமனையினர் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பெளத்தலோவா மாவட்டத்தில் வணிமண்டல திணைக்களத்தில் பணிபுரியும் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட வளிமண்டல அதிகாரி ஒருவர் நெல்லியடி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பில் இருந்து அனுராதபுரம் பகுதியில் உள்ள செயலமர்விற்கு 6 பேர் கொண்ட குழு தனிப்பட்ட வாகனத்தில் வருகை தந்து 3 நாட்கள் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் பயணித்த வாகன சாரதிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேரடித் தொடர்பு கொண்ட இவர் நெல்லியடி பகுதிக்கு வருகை தந்ததையடுத்து இவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.  தற்போது வடமாகாணத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறான நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படாமல் சமூகத் தொற்று பரவக் காரணமாக அமைகிறது.வடமாகாண சுகாதார திணைக்களத்தினரின் இவ்வாறான அசமந்தப் போக்கிற்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது.  இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நீக்கப்பட்டிருப்பதில் பலருக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்