Fri. May 3rd, 2024

கரவெட்டி சுகாதார பணிமனையின் அறிவித்தல்

கரவெட்டி சுகாதார பணிமனையால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதில்
கொவிட் 19 தொடர்பாக தற்போதுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளுக்கும் அது வேகமாகப் பரவி வருகின்றது. நமது பகுதிகளிலும் நோயாளிகள் சிலரைக் கண்டறிந்த போதிலும் அவர்களின் சரியான நோய் மூலத்தைக் கண்டறிவதில் உண்மையில் நாம் தோல்வியடைந்து வருகின்றோம். இது மிகவும் ஆபத்தான நிலை ஒன்றை உருவாக்கலாம்.
இந்த வாரம் அளவில் இலங்கை அரசாங்கத்தால் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்பதுடன் தமிழ் சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தடுப்பூசி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் அதிகளவிலான தொற்றுக்களும் வீடுகளில் பல பேர் இறப்பதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இனி வரும் காலங்களில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பின்வரும் நடைமுறைகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளன.
1. கைகழுவும் வசதி மற்றும் முகக் கவசம் இல்லாத பணியாளர்கள் – உடனடியாக குறித்த நிறுவனம் பூட்டப்படும்.
2. முகக்கவசம் முறையாக அணியாமல் செல்வோர்- பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்படும் (சில வேளை கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படலாம்)
3. பொதுப் போக்குவரத்தில் இருக்கைகளை விட அதிகமாகப் பயணம் செய்வோர் – பயணிகள் இறக்கி விடப்படுவதுடன் குறித்த வாகனம் தனிமைப்படுத்தப்படும். (பாடசாலை சேவை பஸ்களுக்கும் இவ்விதிகள் பொருந்தும்)
4. பாடசாலைகள் உரிய அடிப்படை விதிகளின் படி இயங்காமை – பாடசாலை பூட்டப்படும்
5. வேறு மாகாணங்களில் இருந்து வருகை தந்து தங்களது விபரங்களை மறைப்பவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கண்டு பிடிக்கப்படும் காலத்தில் இருந்து 14 – 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை இல்லாமால் அவர்கள் மீளவும் பயணம் செய்வது தடைசெய்யப்படும்.
தயவு செய்து அனைவரும் இவ்வாறான நடைமுறைகளுக்கு ஒத்துழைக்குமாறும் பெறுமதியான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் 021 226 1006 அல்லது 021 222 6666 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
வருமுன் காப்போம்…. அனைவருக்கும் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வைப் பெற்றுக் கொடுப்போம்.
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்