Fri. Apr 26th, 2024

கமநலச் சேவைகள் திணைக்களம் முன்பாக விவசாயிகள் போராட்டம்

இரசாய உரத்தை இறக்குமதி செய்யவில்லையாயின் கமநலச் சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை முடக்குவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை இரசாயண உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி கமநலச் சேவை திணைக்களங்களுக்கு முன்பாக இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமராட்சி புலோலி, கரவெட்டி மற்றும் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் உள்ள கமநலச் சேவைகள் திணைக்களத்தின் முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கான செயற்கை உரத்தினை அரசாங்கம் திடீரென நிறுத்தியதன் காரணமாக தம்மால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் உள்ளதாகவும்,  எனவே அரசாங்கம் இம்முறை செயற்கை உரத்தை இறக்குமதி செய்து வழங்க வேண்டும்.
இயற்கை உரத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால்
செயற்கை உரத்தை தடை  செய்யப்பட வேண்டுமாக இருந்தால் கால அவகாசம் வழங்கப்பட்டு அதனை  தடை செய்திருக்க  வேண்டும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் இயற்கை உரமான கால்நடை உரத்திற்குக் கூட  தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் இயற்கை உரம் மற்றும் இரசாயண உரங்கள் இல்லாது தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக இரசாயண உரத்தை வழங்குமாறும் அரசை கோரியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்