Thu. May 2nd, 2024

கடற்கரை கரப்பந்து உடுப்பிட்டி அ.மி. கல்லூரி சம்பியன்

வடமராட்சி கல்வி வலய 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் இன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணியை எதிர்த்து தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.  3ம் இடத்தை வல்வை சிதம்பரக் கல்லூரி அணி பெற்றுக் கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்