Sun. May 5th, 2024

உலக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபவனி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை  ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு”அதிகரித்த நிறையையும் பிழையான வாழ்க்கை முறையையும் மாற்றி நீரிழிவை வெற்றி கொள்வோம் “
எனும் தொனிப்பொருளில்  நடைபவனி விழிப்புணர்வுப்பேரணி இன்றைய தினம் (14.11.2022) காலை 7.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து
ஆரம்பித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வரை நடைபெற்றது.
நீரிழிவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ மேற்கொள்ள வேண்டிய உணவுப்பழக்கவழக்கங்கள் , உடற்பயிற்சி, உடல் நிறையைக் குறைத்தல், அன்றாடம் அறிந்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் விதம், நீரிழிவு நோய்  தொடர்பாகவும்  வைத்திய நிபுணர்களால் விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நீரழிவு தொடர்பாக ஓய்வுபெற்ற விரிவுரையாளர்  கலாநிதி சிதம்பரநாதன் அவர்களின் ஏற்பாட்டில் அரங்க செயற்பாட்டு்க்குழுவின் பண்பாட்டு மலற்சிக்கூடத்தின் செயலாளிகளினால் சிறப்பு ஆற்றுகை வழங்கப்பட்டதுடன் கவிதை, சிறப்புப் பாடல் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உடல், உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் முன்னைய காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனவும் விழிப்புணர்வு நடைபவனி ஊடாக அனைவருக்கும் நீரிழிவு பற்றிய விடயங்கள் சென்றடைய வேண்டும் என கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இவ்விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வுர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அத்துடன் போதைப்பொருளையும் இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என  கருத்து தெரிவித்தாா்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் , மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ,யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்.ரி.சத்தியமூர்த்தி,பொது வைத்திய நிபுணர்களான
வைத்தியர். பேரானந்தராஜா ,
 வைத்தியர்.சிவன்சுதன், வைத்தியர்.ஜே.நளாயினி,
குழந்தை நல  வைத்திய நிபுணர் வைத்தியர். ஸ்ரீசரவணபவானந்தன்,   அகஞ்சுரங்கும் தொகுதியியல் நிபுணர் வைத்தியர் அரவிந்தன், நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர். பரமேஸ்வரன்,ஓய்வுபெற்ற விரிவுரையாளர்  கலாநிதி சிதம்பரநாதன் ,போதனா வைத்தியசாலை நீரிழிவு கழகத்தின் உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், மற்றும்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்