Mon. May 6th, 2024

உயிருடன் இருக்கும் தவிசாளரை இறந்துள்ளார் என முகநூலில் பதிவு மக்கள் அதிர்ச்சியில்

உயிருடன் இருப்பவரை இறந்ததாக பொய்யான தகவலை முகநூலில் பதிவிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைநகா் பிரதேச சபை தவிசாளா் விஜயதா்மா கேதீஸ்வரதாஸ்  இறப்பு என பொய்யான தகவல் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. இத் தவறான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிா்வரும் மாகாண சபை தோ்தலில் 2021 வேட்பாளராக களமிறங்குவதற்கான நடவடிக்கையில் துடிப்புடன் காரைநகர் பிரதேச சபையின் வளர்ச்சிக்காக செயற்பட்டு வரும்  இவ்வேளையில் அவருக்கு களங்கம் எற்படுத்தும் முயற்சியில் காரைநகா் பிரதேசசபையின் தவிசாளா்  இன்று(14) மாலை காலமானாா்  இவாின் இமைக்கிாியைகள் பற்றிய விபரம் பின்னா் அறிவிக்கப்படும்  என அவரது படத்துடன்  முகநுலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. காரைநகா் மக்களின் வளா்சியில் மட்டுமன்றி அயற்பிரதேச மக்களின் உயா்ச்சியிலும் தன்னை அா்ப்பணித்து செயலாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தவிசாளா் இறந்துள்ளாா் என்ற செய்தி முகநுலில் ஊடாக பரவியதையடுத்து குடாநாடு, மற்றும் ஏனைய மாவட்ட மக்கள் அதிச்சியடைந்துடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உண்மை அறிந்த பின்னா் பொய்யான தகவல் என அறிந்து ஆறுதலடைந்துள்ளனா். இதேவேளை முகநுலில் பதிவு நீக்கம் செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தவிசாளா் இன்று  14.12.2020 தொிவித்தாா்.
இதேவேளை தொடா்ச்சியாக  தவிசாளாின் தொலைபேசிக்கு அரசியல்வாதிகள், அரச சேவையாளா்கள், மற்றும் மக்கள் என பலரும் தொலைபேசியில் தொடா்ந்து பேசியவண்ணம் உள்ளாா் என அவரது உறவுகள் அறிவித்துள்ளனா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்