Fri. May 3rd, 2024

உதைபந்தாட்ட நடுவர்களுக்கான சீருடை அறிமுகம்

வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடுவர் சங்கத்திற்கான சீருடை தொகுதி அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்பீச் ஹோட்டலில் இடம் பெற்றது.

 

இந்நிகழ்வில். நொதேர்ன்  எலைற் உதைபந்தாட்ட குழுமத்தின் பூரண அனுசரணையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நடுவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இச்சீருடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

நொதேர் எலைற் குழுமத்தின முகாமையாளர் பேரின்பராஜ் அவர்களால் சீருடை தொகுதி  உத்தியோகபூர்வமாக வடமராட்சி லீக்கின் தலைவர் தி.வரதராசன் மற்றும் வடமராட்சி லீக்கின் பொருளாளர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களால் வடமராட்சி லீக்கின் நடுவர் சங்கத்தின் தலைவர் சிவச்செல்வன், பொருளாளர் லக்ஸ்மனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. T-SHIRT & BOTTOM அடங்கலான 34 SET நடுவர் சங்கத்திற்கு நொதேர் எலைற் குழுமத்தால் வழங்கிவைக்கப்பட்டது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்