Thu. May 2nd, 2024

இரவு பெய்த மழையால் விவசாயிகள் பாதிப்பு

வடமராட்சிப் பகுதியில் இரவு பெய்த மழையினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுபடுத்த விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் ஆரம்பித்த மழை காலை வரை நீடித்ததோடு தற்போதும் மழைக்கான காலநிலையே காணப்படுகிறது.

கரணவாய் பகுதிகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றது. பெரும்பாலான விவசாயிகள் வயல் பகுதியில் வெங்காயம். கீரைவகைகள். பயிற்றங் கொடி, உப உணவுப் பயிர்கள் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் இரவு பெய்த மழையினால்  வெள்ளக்காடாக காணப்பட்டு பாரிய. சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,  போக்குவரத்து பாதைகளில் தென்னை மரங்கள் முறிந்து நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஏற்பட்ட நிலையிலும் உப உணவுப் பொருட்கள் செய்கையில் விவசாயிகள்  மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.  ஆனால் தற்போது நஷ்டத்தை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். நஷ்டத்தை ஈடு செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்