Thu. May 2nd, 2024

இடைத் தங்கல் நிலையத்தின் வேலைகள் நிறைவு

சீதுவையில் இராணுவத்தினரும் இராணுவத்தின் சேவா வனிதா பிரிவினரும் இணைந்து, 10 நாட்களில் நிர்மாணித்த கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தின் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

அழகான முறையில் அமைக்கப்பட்ட இந்த இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா ஆகியோர் பார்வையிட்டனர்.

பிரன்டிக்ஸ் (Brandix) நிறுவனம் வழங்கிய கட்டிடம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை நிலையம் 3 விடுதித் தொகுதிகளை கொண்டுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில் 1200 நோயாளிகள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நவீன தொழிநுட்ப கருவிகள் உட்பட தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளிகளின் உளநலத்தை பாதுகாக்கும் பல வசதிகளையும் இந்த நிலையம் கொண்டுள்ளது.

நடைமுறையில் வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க முடியாத, எனினும் பாரிய நோய் அறிகுறிகள் இல்லாத கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் வைத்தியசாலைகளில் உருவாக்கக்கூடிய இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் வைத்திய பணிக்குழாமினர் நோய்த் தொற்றுடையவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதற்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்றா நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவரும் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ சேவையை இங்கு வைத்து வழங்குவதும் இதன் ஒரு நோக்கம் ஆகும். இங்கு சிகிச்சை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சும் இராணுவத்தின் மருத்துவ பிரிவும் இணைந்து மேற்கொள்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்