Fri. Apr 26th, 2024

யூடோவில் முல்லை வீரர்கள் சாதிப்பு

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட யூடோ போட்டியில் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்ட அணியினர் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வடமகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான யூடோ போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 4 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தையும்,
வவுனியா மாவட்ட அணியினர் 4
தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கல பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ் மாவட்ட அணியினர் ஒரு தங்கப் பதக்கம், 5 ஒரு வெள்ளிப் பதக்கம்  உட்பட 2 பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணியினர்
6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்கள் உட்பட 15 பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தையும்,
வவுனியா மாவட்ட அணியினர் 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கல பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்