Thu. Apr 25th, 2024

போதைப் பொருள் பாதிப்பை கட்டுப்படுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு முக்கியம் – ஆ.ஜென்சன்றொனால்ட்

நாடுமுழுவதம் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்பை குறைத்து ஆரேக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களது பங்கு மிகவும் முக்கியமானது என மந்துவில் பொதுசுகாதார பரிசோதகர்
ஆ.ஜென்சன் றொனால்ட் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சுகாதாரக்கல்வி வழங்கும் நிகழ்வு இன்று மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இக்கருத்தமர்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதில் தரம் பத்து மற்றும் தரம் பதினொன்று மாணவர்களும் ஆசிரியர்ஙளும் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள்,புகைப்பொருள், மதுசாரப்பாவனை மற்றும் பிறழ்வான பாலியல் நடத்தைகளால் மாணவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கு உட்படாமல் இருப்பது மற்றும் மீண்டெழும் வழிமுறைகள் குறித்து பல்லூடக உதவியுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்